‘ஒருபக்கம் கொரோனா’.. ‘மறுபக்கம் இந்த கொடுமை வேறையா..!’.. அமெரிக்காவை துரத்தும் அடுத்த துயரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் 2 கோடியே 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கி 78,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக அந்நாட்டில் சுமார் 2 கோடியே 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1939ம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை கணக்கிட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு நிதி நெருக்கடியின்போது 87 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதைவிட தற்போது இருமடங்குக்கும் மேல் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 2 கோடியே 28 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவான நிலையில், இந்த முன்னேற்றத்தை கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு துடைந்தெறிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 14.7 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.