“பெட் ஷீட், தண்ணி எதுவும் கெடையாது!” .. “கொரோனா வைரஸ் எதிரொலி.. விமானம் எடுத்த அதிரடி ஆக்ஷன்”!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதையடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.
இதனால் பல விமான நிறுவனங்கள் சீனாவுக்கு செல்லும் தங்கள் விமானங்களின் சேவைகளையே நிறுத்தியுள்ள நிலையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக சீன பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை, புத்தகங்கள் போன்றவை வழங்கப்படமாட்டாது என தைவானை சேர்ந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக எளிதாக பரவுவதாலும், அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் உண்டாகிறது என்பதால் சைவ உணவை எடுத்துக் கொள்ளும் படியாக சீன அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தனி மனித தொடர்புகளை தடுப்பதன் மூலமும் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்கிற முயற்சியில் சீனாவின் தைவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிரடியாக இறங்கியுள்ளது. அதன் ஒரு படியாக இனி தங்களுக்கான குடிநீர் பாட்டில்களை பயணிகளே எடுத்துவர வேண்டும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருளை இன்னொருவர் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இருக்கையின் பின்புறத்தில் பாலித்தீன் பையும், பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய குறிப்பு அட்டையும் மட்டுமே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.