'1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரசால் அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை அடையலாம் என்ற அறிக்கையால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சத்தில் உறைந்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் வல்லரசு நாடுகளை அபாய கட்டத்தில் தள்ளிவிட்டது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2484 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் அமெரிக்கா பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் ஏறு முகத்தில் செல்கிறது. இதே நிலைமை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் வைரஸ் தாக்கம் மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை அடையலாம் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கொரோனா வைரஸின் தாக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் அடுத்த இரு வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும். உயிரிழப்பை 1 லட்சத்திற்குள் கட்டுப்படுத்தினாலே பெரிய விஷயம். வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. சமூக விலகல் உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது, ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.
ஜூன் 1ம் தேதிக்கு மேல் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கலாம் என கவலையுடன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை என்றால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்று, பொது சுகாதார நிபுணர்கள் டிரம்ப்பிடம் கூறியுள்ளது அவருக்கு கடும் அச்சத்தை கொடுத்துள்ளது.
