"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி!" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 30, 2020 09:55 PM

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.

sakthimasala pvt ltd donates rs 5 cr to TN Govt corona relief fund

இதுபற்றி சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், மரியாதைக்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஐந்து கோடியை சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டதோடு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் பங்கேற்க தங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தம் நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் மேலாண்மை இயக்குநர் P.C.துரைசாமி மற்றும் இயக்குநர் D.சாந்தி உள்ளிட்ட இருவரின் ஒப்பத்துடன் வெளியாகியுள்ளது.

Tags : #CORONA #CORONAVIRUS #SAKTHIMASALA