‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 30, 2020 08:28 PM

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், தன் பணியில் சேர்வதற்காக சாப்பாடு இல்லாமல் 450 கி.மீ. தூரத்தில் 20 மணிநேரம் நடந்தே சென்று இளம் கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்துள்ளார்.

Young cop travels 20 hours on foot to join Duty in Madhya Pradesh

கொரோனாவால் இந்தியா உட்பட மொத்த உலகமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, அதைவிட ஊரடங்கு உத்தரவால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உண்ண உணவில்லாமல், தங்கள் சொந்த ஊருக்கே பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் தனது பணியின் மீதான அர்ப்பணிப்பால், பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார் உத்தரப்பிரதேசம் எட்டாவாவைச் சேர்ந்த 22 வயதான கான்ஸ்டபிள் திக்விஜய் சர்மா.

இவர் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், தனது பேச்சிலர் டிகிரி தேர்வு எழுதுவதற்காக, தனது சொந்த ஊரான  உத்தரப்பிரதேசத்திற்கு கடந்த 16-ம் தேதி சென்றுள்ளார். இடையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் தேர்வு தள்ளிவைக்கப்பட, அங்கிருந்து பணியில் சேர கிளம்ப முயற்சித்துள்ளார். அப்போது, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், இவரது குடும்பத்தினர் மற்றும் இன்ஸ்பெக்டர் உட்பட யாரும் தற்போதைக்கு பணியில் சேர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இதனை பொருட்படுத்தாத திக்விஜய் சர்மா, பணி மீது கொண்ட ஈர்ப்பால், கடந்த 25-ம் தேதி காலை 450 கி.மீ. தொலைவு உள்ள மத்தியப்பிரதேசம் ராஜ்கார்க்கிற்கு, சாப்பாடு இல்லாமல், 20 மணிநேரம் நடந்தும், சில இடங்களில் பைக்குகளில் லிஃப்ட் கேட்டும் மார்ச் 28-ம் தேதி வந்துள்ளார். நடந்தே வந்ததால் கால்கள் வீங்கியுள்ளதால் ஓய்வு எடுத்துவரும் இளம் கான்ஸ்டபிள் திக் விஜய்சர்மா, சீக்கிரமே பணியில் சேர உள்ளதாக கூறியுள்ளார். இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags : #CORONAVIRUS #POLICE #UTTARPRADESH #WALK #RAJGARH #MADHYA PRADESH