'60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி!'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 30, 2020 05:45 PM

கேரளாவில் ஊரடங்கு உத்தரவால் மதுபானத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருந்ததது.  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முக்கிய வழிமுறையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டதோடு பிரதமர் மோடி இதை உத்தரவாகவும் பிறப்பித்தார்.

Kerala doctor\'s liquor \'prescription\' pic goes viral

இந்த நிலையில் திடீரென மதுபான விற்பனை நிறுத்தப்பட்டதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் இதனால் பல சிரமங்களுக்கு ஆளானதாகவும் கேரளாவில் மதுவுக்கு அடிமையான சிலர் கூறிவந்தனர். இதில் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனால் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மது விற்பனைக்கான தடையை சற்று தளர்த்தி உள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கொடுங்கலூர் பகுதியில் மருத்துவ ஊழியம் செய்து வரும் மருத்துவர் ஒருவர் தன்னிடம் வந்த மதுவுக்கு அடிமையான நோயாளி ஒருவருக்கு சில அறிகுறிகள் இருப்பதை பார்த்துவிட்டு மெடிக்கல் ப்ரிஸ்க்ரிப்ஷன் எனப்படும் மருந்து சீட்டில் நோயாளி ஒருவருக்கு மது குடிக்க பரிந்துரை செய்து எழுதி கொடுத்ததாக புகைப்படம் ஒன்று வெளியானது.

இவரிடம் வந்த மதுவுக்கு அடிமையான ஒருவர் திடீரென மதுவிற்பனை தடைபட்டதால் வித் ட்ராயல் சிம்டம் எனப்படும் திடீரென மதுவை நிறுத்துவதால் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு வரும் ஒருவித நடுக்கத்தால் சிரமப்பட்டது போலவும், அதற்காக அவருக்கு அந்த மருந்து சீட்டில் 60 மிலி மதுவும் அதனுடன் சோடாவும் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்க வேண்டும் என்றும், இதனுடன் மாலை நேரத்தில் வறுத்த முந்திரியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் எழுதி இருக்கிறார்.

பின்னர் இந்த மருந்து சீட்டு இணையத்தில் வைரலானதையடுத்து இதுபற்றி விளக்கிய, அந்த மருத்துவர் பழைய லெட்டர் பேட் ஒன்றை விளையாட்டிற்காக மருந்து சீட்டாக எழுதிக் கொடுப்பது போல் எழுதிக் கொடுத்ததாகவும், இதனை சில நண்பர்களுக்கு அனுப்பியதாகவும், அவர்களது சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டதாகவும் இந்த மருந்து சீட்டில் எழுதப்பட்டது போல் எந்த ஒரு நோயாளியும் தன்னிடம் வரவில்லை என்றும் இருப்பினும் தன்னுடைய செயலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.