“ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது!” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு BSNL வாடிக்கையாளர்கள் சேவையில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் பலரும் பொருளாதார ரீதியலான சிரமத்தை அனுபவித்து வருவதாகவும், இதனால் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும், பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சேவை ஏப்ரல் 20-ஆம் தேதி வரை துண்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஊக்கத்தொகையாக மேலும் 10 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே சலுகையை ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதில் வோடாபோன் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையும் ஏர்டெல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலும் இந்த சலுகைகளை நீட்டித்துள்ளதாக தெரிகிறது.
