‘வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 30, 2020 05:14 PM

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி 15 விநாடிகளுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp has reduces Status video time limit to 15 seconds to indians

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பான்மையான நேரத்தை மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில்தான் செலவழிக்கின்றனர். இதனால் வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதால், தங்களின் இணைய சர்வர்களின் சுமைகளை சமாளிக்க முடியாமல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.

ஏற்கனவே இணைய தேவை அதிகரித்து காணப்பட்டதால், ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ், இன்ஸ்டாகிராம் என அத்தனைத் தளங்களிலும் ஹெச்டி வீடியோ தரம் நிறுத்தப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் 30 விநாடிகளுக்கு என இருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி தற்போது 15 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 15 வினாடிகளுக்கு மேல் இருந்தால், வீடியோவை கட் செய்து பதிவேற்ற வேண்டும்.

ஸ்டேடஸ் காலளவை குறைப்பதால், இணைய சர்வரின் சுமையைக் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று  பயங்கரம்  முடியும் வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 15 நிமிட இந்த நடவடிக்கை இந்திய பயனர்களின் மீது மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.