'எனக்கு கொரோனா எப்படி வந்துச்சுன்னே தெரியல...' '3 வாட்டி டெஸ்ட் பண்ணினாங்க,நெகட்டிவ்...' பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 23, 2020 06:57 PM

சீனாவில் வூஹானில் வசிக்கும் ஒருவருக்கு 4வது முறை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கொரோனா வைரஸ் உறுதியாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The coronavirus has been confirmed only after the 4th test

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸானது சீனாவின் வூஹானில் இருந்து பரவியது. தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியதாக அறிவித்த சீனா பல இடங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளது. இருந்தும் குறைந்த அளவில் கொரோனா பாதித்த நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது சீனாவின் வூஹானில் 52 வயதான காய்கறி வியாபாரி ஹி ஜிம்மிங் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸின் அறிகுறி என்பதால் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு கொரோனோவை உறுதி செய்யும் நியூக்ளிக் அமில பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையின் முடிவின் ஹி ஜிம்மிங்க்கு கொரோனா இல்லை என்ற முடிவே வந்துள்ளது.

இருப்பினும் மூச்சு விடும் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றதால், தொடர்ந்து மூன்று முறை மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என வந்ததால் மருத்துவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த மருத்துவக்குழு அவரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

அதையடுத்து இறுதியாக ஆன்டிபாடி சோதனை நடத்தலாம் என முடிவெடுத்தது மருத்துவக்குழு.  ஆன்டிபாடி சோதனை என்பது வைரசை எதிர்த்து போராடும் வகையில் நமது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இரத்தம் மூலம் கண்டறியப்படுவதாகும்.

அதன்படி ஹி ஜிம்மிங்க்கு நடத்தப்பட்ட ஹி ஜிம்மிங்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை முடிவுகள் தவறாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது பற்றி அவர் கூறுகையில், நான் இதனை எதிர்பார்க்கவில்லை. எனக்கு எப்படி கொரோனா வைரஸ் வந்தது என தெரியவில்லை.

மேலும் நியூக்ளிக் அமில சோதனை சில சமயங்களில் துல்லியமான முடிவை கொடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான முடிவுகள் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் பலர் குறிப்பிடுகின்றனர்.

Tags : #CHINA