கொரோனாவை 'காரணம்' காட்டி... 'இந்த' விஷயத்தில் ஏதாவது திட்டமிட்டால்... 'சீனாவுக்கு' கடும் 'எச்சரிக்கை' விடுத்துள்ள அதிபர் 'ட்ரம்ப்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 23, 2020 01:30 AM

கொரோனாவை காரணம் காட்டி வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை சீனா பின்பற்றவில்லை என்றால் அதை ரத்து செய்துவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Coronavirus Trump Threatens To Terminate US-China Trade Deal

முன்னதாக அமெரிக்கா - சீனா இடையே 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வந்த நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி இறக்குமதி வரிகளை அதிகப்படுத்தியதால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் 2 நாடுகளுக்கு இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சீனா 153 லட்சம் கோடி ரூபாய்க்கு அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை காரணமாகக் கூறி புதிதாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அம்சத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க சீனா திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், "கொரோனாவை காரணம் காட்டி வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை சீனா பின்பற்றவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவேன். என்னை விட யாரும் சீனா மீது இத்தனை கடுமை  காட்ட முடியாது" என எச்சரித்துள்ளார்.