'பொருளாதாரம் சரிவு...' 'தொழில் பாதிப்பு...' 'சுற்றுலா முடக்கம்...' 'வேலையிழப்பு...' "கொரோனாவின் அடுத்த அடிக்கு தயாராகுங்கள்..." 'எச்சரிக்கும் சீனா...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 21, 2020 10:00 PM

கொரோனா வைரஸ் உலகளவில் உணவு பற்றாக்குறை  ஏற்பட வழிவகுக்கும் என்று சீனா துணை வேளாண்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Coronavirus can lead to food shortages worldwide

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 1.65 லட்சத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரமும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. வேலையிழந்து வருமானமில்லாமல் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு, உலகளாவிய உணவு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீனா துணை வேளாண்துறை அமைச்சர் யு காங்சென் கூறியுள்ளார். கொரானா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிய பிறகு, பல்வேறு நாடுகளும் முக்கிய தானியங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளன.

தங்கள் நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன, இந்த நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் போது, உணவு உற்பத்தி மற்றும் உணவு வர்த்தகம் நிச்சயம் பாதிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது உணவு நெருக்கடியை தூண்டுவதற்கும் வழிவகுக்கும் என்றும், சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.