இந்த ரணகளத்திலும் 'கிளுகிளுப்பாக' போட்டி நடத்திய 'சீனா'... '48 மணி' நேரத்தில் '10 மில்லியன்' பார்வையாளர்களை பெற்ற 'வீடியோ...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 21, 2020 10:27 PM

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், நிறுவனம் சார்பில் 'முத்தப்போட்டி' நடத்திய நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chinese holding bizarre ‘kissing contest’ amid Covid outbreak

சீனாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அங்கு குறிப்பிட்டசில தொழிற்சாலைகள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் ஜியாக்சூ (Jiangsu) மாகாணத்தில் உள்ள சுசோவ் (Suzhou) என்ற நகரில் தளவாட தொழிற்சாலை ஒன்று தனது பணியை நேற்று தொடங்கியது. இதையடுத்து ஊழியர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் முத்தப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட பல கண்ணாடித் தடுப்புகள் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இருபக்கமும் ஆண்களும் பெண்களும் நிற்கின்றனர். பின்னர் கண்ணாடியின் இருபக்கமும்  ஒருவர் ஒருவராக நின்றபடி முத்தமிட்டுக் கொள்கின்றனர்.  இதன் மூலம் தொழிலாளர்கள் உற்சாகமாக வேலையைத் தொடங்க முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ முதல் 48 மணி நேரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.