கடந்த 'ஜனவரியிலேயே' வாங்கி 'பதுக்கி விட்டது சீனா...' தேவையைவிட '18 மடங்கு' வாங்கிக் 'குவித்தது'... 'இப்போது சீனா வைப்பது தான் விலை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 23, 2020 10:49 AM

சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி பதுக்கி வைத்து தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வெள்ளை மாளிகை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

China sells protective shields at high prices -U.S. charges

இதுகுறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி குவித்தது. தேவையை விட 18 மடங்கு அதிகமாக வாங்கியது. முக கவசம் மட்டும் 200 கோடி எண்ணிக்கையில் கொள்முதல் செய்தது. இதற்கு சீன சுங்கத்துறையிடம் இருந்து தனக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகக்'' குறிப்பட்டுள்ளார்.

இந்த பொருட்களை சீனா பதுக்கி வைத்ததால், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் இவை கிடைக்காமல் தவிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார். பதுக்கியதுடன், இந்த பொருட்களை சீனா அதிக விலைக்கு விற்க தொடங்கி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.