'கொரோனா' பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக 'எத்தனை' நாட்களாகும்?... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக எவ்வளவு நாட்களாகும் என்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸால் ஒருவர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. அதில், "கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுடைய வயது, பாலினம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை பொறுத்து சிலர் விரைவில் குணமடைவார்கள். மற்ற சிலர் குணமாக நீண்ட காலமாகும். மேலும் அதற்கான சிகிச்சையை அவர் எந்தளவிற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார் என்பதை பொறுத்தும் குணமாகும் காலம் உள்ளது.
கொரோனா பாதிப்புள்ள பெரும்பாலானவர்களுக்கு முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு இந்த அறிகுறிகளோடு உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும். ஆரம்பத்தில் வறட்டு இருமல் மட்டுமே இருந்தாலும் போகப்போக சிலருக்கு சளி வரத் தொடங்கும். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் விரைவாக குணமடைந்துவிடுவார்கள். இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இதிலிருந்து குணமடைந்து விடுவார்கள்" என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.