‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு’.. ப.சிதம்பரத்துக்கு திகார் சிறை..! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 05, 2019 06:07 PM

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

P Chidambaram sent to judicial custody till September 19

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு மீதான விசாரணையில் ப.சிதம்பரத்தை வருகிற 19 -ம் தேதி வரை திகார் சிறையில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிதம்பரம் தரப்பில் திகார் சிறை வேண்டாம் என்றும் வீட்டு சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : #PCHIDAMBARAM #TIHARJAIL #CBI