‘சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி’.. பிக்பாஸ் பிரபலத்தின் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 30, 2019 08:46 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் தாய் மற்றும் குடும்பத்தினர் பணமோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
திருச்சி கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அருணகிரி-தமயந்தி. இவர்களுடைய மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்கள் 5 பேரும் அப்பகுதியில் அரசின் அனுமதி பெறாமல் 1998 -ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இதில் தவணை முறையில் 34 நபர்கள் பணம் கட்டி வந்துள்ளனர்.
ஆனால் பணம் கட்டியவர்களுக்கு அவர்களது பணத்தை உரிய காலத்துக்குள் திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தரவேண்டிய ரூபாய் 32 லட்சத்து 28 ஆயிரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என, கடந்த 2007 -ஆம் ஆண்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் அருணகிரி மற்றும் சொர்ண ராஜன் உயிரழந்த நிலையில், பணமோசடி வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி 2 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா 1 லட்சம் என ரூ.29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜலட்சுமி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் தாயார் என்பதும் மற்றவர்கள் அவரின் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.