ஆற்றுக்கு நடுவில் 'டிக்டாக்'.. சடாரென 'உடைந்த' பாலம்.. என்ன ஆச்சுன்னு 'நீங்களே' பாருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 10, 2019 08:22 PM
டிக் டாக் மோகம் இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க போகிறது என தெரியவில்லை. நாளுக்குநாள் யாராவது ஒருவர் பலியாகிக் கொண்டேசெல்கின்றனர். எனினும் அந்த மோகம் இளைஞர்கள் மத்தியில் துளியும் குறையவில்லை.

ஆப்பாயில்கள் 😂😂😂😂 pic.twitter.com/8U0LmE10Kr
— மறுபிறவி (@cza_offi) December 10, 2019
அதற்கு இந்த வீடியோவை ஒரு உதாரணமாக சொல்லலாம். ஆற்றுக்கு நடுவில் இருக்கும் மர பாலத்துக்கு மேல் அமர்ந்து 5 இளம்பெண்கள் டிக் டாக் வீடியோ செய்கின்றனர். சடாரென பாலம் உடைந்து விழுகிறது. அந்த பெண்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்து எழுகின்றனர்.
ஆற்றில் நீர் குறைவு என்பதால் பெண்கள் ஆபத்தின்றி தப்பினர். இதுவே தண்ணீர் அதிகம் இருந்து இருந்தால் அந்த பெண்களுக்கு என்ன ஆகி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. டிக் டாக்கை விட உயிர் முக்கியம் என்பதை இளைஞர்கள் என்று உணர போகின்றனர்? என்று தெரியவில்லை.
