VIDEO : "என்னடா சொல்றீங்க?, உண்மையாவா??..." '2' மணி நேரத்துக்கு மேல் 'ஆன்லைன்' க்ளாஸ் எடுத்த 'பேராசிரியர்'... இறுதியில் தெரிஞ்ச 'உண்மை'.. பாவம்யா 'மனுஷன்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, உலகளவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகம் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன.
இதில், நடைபெறும் சில நகைச்சுவை அல்லது தவறுகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் இந்த காலக்கட்டங்களில் வைரலாகி வந்த வண்ணமும் உள்ளன. இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுக்கான வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வகுப்பை கணித பேராசிரியர் டாங் வாங் (Dong Wan) என்பவர் நடத்தி வந்துள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்த ஆசிரியர், அதன் பிறகு மாணவர்களிடம் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என கேட்டுள்ளார். யாரும் பதிலளிக்காத நிலையில், 'அப்போது வகுப்பை முடித்துக் கொள்ளலாமா?' என்றும் கேட்டுள்ளார். அப்போது, சில மாணவர்கள் அவரிடம், நீங்கள் எடுத்த வகுப்பு, 6:08 மணி வரை மட்டுமே கேட்டது என்றும், அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆறு மணிக்கு வகுப்பு ஆரம்பித்த நிலையில், சுமார் 8 மணி வரை டாங் வாங் வகுப்பு எடுத்துள்ளார்.
இதனால், ஒரு நிமிடம் உறைந்தே போன டாங் வாங், தான் இரண்டு மணி நேரம் எடுத்த வகுப்பு வீணாய் போனதை உணர்ந்து மிகவும் வேதனையடைந்தார். பிறகொரு நாள், மீண்டும் இந்த வகுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், 'ஆறு மணிக்கு அவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்த நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் தனது அழைப்பை தெரியாமல் 'mute' செய்துள்ளார். இதனை அவருக்கு தெரியப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். அவரது எண்ணிற்கு அழைத்த போது அழைப்பையும் அவரை எடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.