'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பாதிப்பால் வேறுவழியின்றி பணிநீக்க முடிவை எடுத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பல விமான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதையடுத்து செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி அளித்து வருவதால் அவற்றின் ஊழியர்களுடைய வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நிலைமை சீரடையாததால் பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்போது அந்நிறுவனத்தில் 17,200 ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் தடைபட்டுள்ளதால், வருமானமின்றி ஊழியர்களுக்கு சம்பளம், கடனாளர்களுக்கு செலுத்தவேண்டிய தொகை, பராமரிப்பு செலவு ஆகிய பல செலவுகள் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேறு வழியின்றி இவற்றை எல்லாம் சமாளிக்க அந்நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 4,300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
