"கொரோனாவ சொல்லி எதுக்கு வேணாலும் தடை போடலாம்..." "ஆனா இதுக்கு தடை போட முடியுமா?..." 'அம்மா அம்மாதான்...'
முகப்பு > செய்திகள் > உலகம்பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவில் இருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மார்கள் அனுப்பி வருகின்றனர்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று வேலை செய்து வரும் தாய்மார்கள் தற்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் சிங்கப்பூரிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.
இதனால் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு ஒரு வழியை கண்டுபிடித்துள்ள தாய்மார்கள், நிதி திரட்டி தாய்ப்பாலை பதப்படுத்தி புட்டிகளில் சேகரித்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைத்து மலேசியாஅனுப்பி வருகின்றனர்.
இவ்வாறு சுமார் 200க்கும் மேற்பட்ட தாய்மார்கள் 7 ஆயிரம் கிலோ எடையிலான தாய்ப்பாலை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு அனுப்பியுள்ளனர்.