ஸாரி...! 'இனி உங்களுக்கு இங்க வேலை இல்ல...' லைஃப்ல செட்டில் ஆகணும்னு 'அந்த' நாட்டுக்கு போனாங்க...! 'இப்போ எல்லாம் போச்சு...' - நாடு திரும்பும் 11,000 இந்தியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்சிங்கப்பூர் நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஆட்குறைப்பு காரணமாக சுமார் 11 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து நாடு திரும்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகெங்கும் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளின் பெரு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரிலும் கடந்த மே மாதம் முதல் 17,000 இந்தியர்கள் 120 சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தற்போது நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து நாடு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் தெரிவித்துள்ளதாவது, இதற்கு முன் சுமார் 17,000 பேர் வேலையில்லாமல் இந்தியா வந்ததை அடுத்து தற்போது புதிதாக இதுவரை 11,000 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் வேலையிழந்தோர், மருத்துவச் சிகிச்சைக்காக நாடு திரும்புவோர், குடும்பச் சூழ்நிலை காரணமாகத் திரும்புவோரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவின் 'வந்தேபாரத்' திட்டத்தின் படி, சிறப்பு விமானங்கள் மூலமாகவே இந்தியா திரும்புகின்றனர்.
மேலும் இந்தியா - சிங்கப்பூர் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா - ஆசியான் ஹேக்கத்தானை ஆண்டு இறுதியில் திட்டமிடபட்டுள்ளது. சிங்கப்பூர் உற்பத்தி கூட்டமைப்புடன் உற்பத்தி கூட்டுறவு வாய்ப்புகளுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். உலக உற்பத்தி ஸ்தலமாக இந்தியா விளங்க சிங்கப்பூர் முதலீடுகள் உதவும்.
அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரானது இந்திய சந்தையின் நீண்டகால அன்னிய முதலீட்டு ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலமாக நம் நாட்டில் மேலும் தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
