'ஜூன் 1' வரை ஊரடங்கு 'நீட்டிப்பு'... கொரோனா 'பரவலை' தடுப்பதற்காக... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 21, 2020 04:34 PM

கொரோனா பரவலை தடுப்பதற்காக  சிங்கப்பூரில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Coronavirus Lockdown Singapore Extends Circuit Breaker To June 1

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நிலையில் பெரும்பாலான உலக நாடுகளில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக விலகலை கடைபிடிக்குமாறு மக்களிடம் அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஏற்கனவே மே 4 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் லீ அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.