'நோயே பரவாதப்போ'... 'இதுமட்டும் எப்படி சாத்தியம்???'... 'அதுவும் பிறக்கும்போதே'... 'வியப்பில் மருத்துவர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை ஒன்று மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூரில் செலின் இங்சான் எனும் பெண் கர்ப்பமாக இருந்தபோது கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் அந்த குழந்தைக்கு பிறக்கும்போதே கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருந்துள்ளன.
கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து கருவிலிருந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றல் கடத்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் நிலையில், கொரோனா பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண் பிரசவத்தின் போதோ அல்லது கர்ப்ப காலத்திலோ தனது கருவுக்கு வைரஸை கடத்த முடியுமா என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுவரை குழந்தையைச் சுற்றியுள்ள கருப்பை திரவத்தில் அல்லது தாய்ப்பால் திரவ மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதற்கான ஆன்டிபாடிகளுடன் பிறப்பதை ஏற்கனவே சீனாவில் உள்ள மருத்துவர்களும் தெரிவித்துள்ள சூழலில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது அரிதானது என ஜமா குழந்தை மருத்துவ இதழில் அக்டோபர் மாதம் கூறபட்டுள்ளது. அதை தற்போது சிங்கப்பூர் அரசு மருத்துவமனையும் உறுதிப்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
