‘வெண்டிங் மெஷின் மூலம் பொது இடங்களில்'... ‘இலவசமாக முகக் கவசம்’... ‘நாட்டு மக்களுக்காக’... 'அசத்தும் பிரபல நிறுவனம்’...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 13, 2020 02:24 PM

சிங்கப்பூர் மக்கள் இலவசமாக முகக்கவசங்களை பெறும் வகையில் பிரபல நிறுவனம் வெண்டிங் மெஷினை வைக்க திட்டமிட்டுள்ளது.

Razer is giving away 5 million masks to Singaporeans

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது இடங்களில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் அங்கு அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது.

இதையடுத்து விளையாட்டு பொருட்களை உருவாக்கும் பிரபல ரேசர் நிறுவனம், தற்போது கொரோனாவால் முகக்கவசங்களை தயார் செய்து வரும் நிலையில், அதனை மக்கள் இலவசமாக பெறும் வகையில், திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மால்கள் மற்றும் தொழிற்சாலைகளில் முகக்கவசங்களை பெறுவதற்காக வெண்டிங் மெஷினை வைத்துள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் முதற்கட்டமாக 50 லட்சம் முகக்கவசங்களை இலவசமாக வழங்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ மின் லியாங் டன் தெரிவித்துள்ளார். இந்த செயல் பாராட்டுக்களை குவித்து வருகின்றது.