'பாலியல் தொழிலாளியிடம் சென்றுவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய பலே வாடிக்கையாளர்!' - நீதிமன்றத்தின் ‘வேறலெவல்’ தீர்ப்பு.. ‘நெகிழ்ச்சியில்’ பாலியல் தொழிலாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பாலியல் தொழிலாளி ஒருவரிடம் சென்றுவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து ஒரு பாலியல் தொழிலாளியிடம் செல்லும் வாடிக்கையாளர் ஒருவர் பணம் கொடுக்க மறுத்தால் அவர் மீது அந்த பாலியல் தொழிலாளி வழக்கு தொடர முடியாது. பாலியல் தொழிலாளிக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தம் முறைகேடான என்று நீதித்துறை கருதுவதால் தான் இந்த நடைமுறை இதுவரை நிலவி வந்தது.
இந்த நிலையில் முதல் முறையாக St.Gallen பெடரல் நிர்வாக நீதிமன்றம் வித்யாசமான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அந்த தீர்ப்பின் படி பாலியல் தொழிலாளி ஒருவரிடம் சென்று விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய நபர் ஒருவருக்கு சுமார் 300 சுவிஸ் பிராங்க் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.
அத்துடன் அந்த நபருக்கு 50 நாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இப்படி முதல் முறையாக நீதித்துறை தங்களது பாதுகாப்பின் மீது செலுத்தும் அக்கறைக்கு பாலியல் தொழிலாளிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.