'இனி அப்போ அந்த பயமில்லாம சாப்டலாம்???'... 'NON-VEG உணவு சந்தையில் புதிய திருப்புமுனை?!!'... 'உலகிலேயே முதல்முறையாக அதிரடி முடிவெடுத்துள்ள நாடு!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலேயே முதல் முறையாக இறைச்சி உணவு சந்தையில் சிங்கப்பூர் அரசு அதிரடி அனுமதி ஒன்றை வழங்கியுள்ளது.
ஆடு அல்லது கோழி போன்றவற்றை பண்ணைகளில் வளர்த்து அதை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு இனி அவசியமின்றி ஆய்வகங்களில் இறைச்சியை உற்பத்தி செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு உலகத்திலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், கால்நடைகளின் நலன் போன்ற பேச்சுக்கள் சமீபகாலமாக அதிகமாகியுள்ள சுழலில், அதற்கு மாற்றாக ஆய்வகங்களில் இறைச்சிகளை உற்பத்தி செய்து வழங்குவது என்ற புதிய முறை வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஈட் ஜஸ்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அதாவது விலங்கினத்தின் உடல் திசுவில் இருந்து பிரிக்கப்பட்ட செல்களைக் கொண்டு ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி நடைபெறுகிறது. இதுபோல உற்பத்தி செய்வதற்கு செலவு அதிகம் பிடிக்கும்போதும், வருங்காலத்தில் இந்த செலவு குறையக்கூடும் எனவே கூறப்படுகிறது. உலக அளவில் 20க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் மீன், ஆட்டு இறைச்சி, சிக்கன் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து 2029ஆம் ஆண்டில் இது போன்ற ஆய்வகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய இறைச்சிகளின் சந்தை மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கக்கூடுமென ஒரு கணிப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக சீனாவிலிருந்து கொரோனா பரவிய பிறகு, இறைச்சி கூடங்களில் இருந்து நோய்கள் பரவுகின்றன என்ற வாதம் அதிகரித்து வரும் நிலையில், ஆய்வக இறைச்சி உற்பத்தியால் இந்த பாதிப்பு ஏற்படாது எனவே கூறப்படுகிறது. இதன்முலம் இப்படி முதல்முறையாக ஆய்வகத்தில் இறைச்சிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது இறைச்சி சாப்பிடும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள பெரும் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது.