'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே!'.. ஊரடங்கு காரணமாக... 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை!.. நீதிமன்றம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | May 20, 2020 04:20 PM

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு, 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

singapore court orders death sentence for convict via zoom app

மலேஷியாவை சேர்ந்தவர் புனிதன் கணேசன் (37). அவர், கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீதிமன்ற பணிகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடக்கிறது. இந்த வழக்கும் ஜூம் செயலி மூலம், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்நாட்டு உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறுகையில், விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில், கிரிமினல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கணேசனின் வழக்கறிஞர் கூறுகையில், ஜூம் செயலி மூலம் கணேசனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால், தண்டனை விவரம் மட்டும் ஜூம் செயலி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால், செயலியை பயன்படுத்த நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.