”பொண்ணுங்களா...! அப்படி நான் என்ன சொல்லிட்டேன்...' அதுக்காக 'இப்படியா' பண்ணுவீங்க...?” - ‘தரமான சம்பவம்' செய்த பெண்கள்... காருக்குள்ளேயே கதறிய ‘கால் டேக்ஸி’ டிரைவர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் மாஸ்க் அணியாத பெண்ணை மாஸ்க் அணிய சொன்னதற்கு கால்டாக்சி ஓட்டுநரை பெண்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தை சேர்ந்த கத்கா, 8 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்து பணி செய்து வருகிறார். தற்போது டிரைவராக பணிபுரிந்து வரும் கத்கா, சான் பிரான்சிஸ்கோவில் தனது காரில் 3 பெண்களை ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலகட்டத்தில் மாஸ்க் அணிவது அனைத்து நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, காரில் ஏறிய பெண்களில் ஒருவர் மாஸ்க் அணியாததால் மாஸ்க் அணியுமாறு கத்கா கேட்டுள்ளார்.
தன்னிடம் மாஸ்க் இல்லாததால் அணியவில்லை என அந்த பெண் கூறவே, அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்திய கத்கா, மாஸ்க் வாங்கி அணியுமாறு தெரிவித்துள்ளார்.
கார் ஓட்டுநர் மாஸ்க் அணியுமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ஓட்டுநரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளனர். மூவரும் ஓட்டுநரின் செல்போனை தூக்கி எறிந்தும், அவர் அணிந்திருந்த மாஸ்கை கிழித்தும் எறிந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், அந்த பெண்கள் ஓட்டுநரின் முகத்தின் முன்பு இருமி, எங்களுக்கு கொரோனா என்றால் இனி உனக்கும் கொரோனா எனக் கூறி சத்தமிட்டு சிரித்து கிண்டலடித்துள்ளனர். காரில் இருந்து இறங்கிய பெண்கள் பெப்பர் ஸ்பிரேவையும் ஓட்டுநர் மீது அடித்த்துச் சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் காரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ள கார் ஓட்டுநர், 'நான் தவறாக எதுவுமே கூறவில்லை. நான் பேசத் தொடங்கியதுமே தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டனர். அதன் பின்புதான் தகராறு செய்யத் தொடங்கினர்' என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.