'சப்வேயில் இருக்கும் போது ஒருவரிடம் மற்றோருவர் பேசக்கூடாது!'.. 'செல்போன்ல கூட பேசக்கூடாது!'.. இது என்னங்கடா புது ட்விஸ்டா இருக்கு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுரங்கப்பாதை போன்ற இடங்களில் மற்றவர்களிடம் பேசுவதோ, செல்போனில் பேசுவதையோ தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகியுள்ளது. இதனால், அந்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இதற்கிடையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரெஞ்சு நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
அதன்படி, பொதுப்போக்குவரத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். சமூக விலகல் சாத்தியமில்லாத சுரங்கப்பாதை போன்ற இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதாவது மற்றவர்களிடம் பேசுவதோ, செல்போனில் பேசுவதையோ தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
துணியால் செய்யப்பட்ட மாஸ்குகளை விட, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மாஸ்குகளை மட்டுமே பொது வெளியில் அணிய வேண்டும் என்ற சமீபத்தில் பிரான்ஸ் அரசு விதித்திருந்த பரிந்துரைக்கு இந்த அகடாமி ஆட்சேபனை தெரிவித்தது. பொதுமக்களுக்கு துணி முகக்கவசமே போதும் என தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
