VIDEO: அய்யய்யோ..! ‘மறந்துட்டேனே’.. நாடாளுமன்றத்தில் ‘பதறியடித்து’ ஓடிய ஜெர்மனி அதிபர்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்றத்தில் திடீரென பதறியடித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்திலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் 111 மில்லியன் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஜெர்மனியில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசி வருகிறது. கடந்த 14 நாட்களில் மட்டுமே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை அங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
German Chancellor Angela Merkel panics after forgetting her face mask pic.twitter.com/FGxhUTMzkE
— Reuters (@Reuters) February 19, 2021
இந்த நிலையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பேசினார். அப்போது முகக்கவசம் அணியவில்லை என்பதை உணர்ந்த அவர், பதறி அடித்துக்கொண்டு அருகில் இருந்த மேசையின் மீது தான் மறந்து வைத்த முகக்கவசத்தை அணிந்துகொண்டு வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
