'டாக்டர் என்னோட உயரத்தை அதிகரிக்கணும்'... 'இளைஞருக்கு வந்த ஆசை'... 'தம்பி, ஆபரேஷன் ஓவர், பில்லை கட்டிடுங்க'... மலைக்கவைத்த தொகை!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் பகுதியை அடுத்த டல்லஸ் என்னும் இடத்தைச் சேர்ந்தவர் அல்போன்சோ ப்ளோரஸ் (Alfonso Flores).

அல்போன்சோ தனது சிறு வயது முதலே மிகவும் உயரமாக தான் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார். 28 வயதாகும் அல்போன்சோ, 5 அடி 11 அங்குலம் உயரம் இருந்த போதும் இன்னும் உயரம் வைக்க வேண்டும் என்றே அவர் ஆசைப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது உயரத்தை அவர் அதிகப்படுத்தினார் என்பது தான் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். அது மட்டுமில்லாமல், இதற்காக அவர் மேற்கொண்ட செலவு தான் ஹைலைட்டே.
அல்போன்சோ 5 அடி 11 அங்குலம் வரை உயரமாக இருந்த நிலையில், தனது கால் பகுதியை நீளமாக்க அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இதன் பிறகு, அவர் தற்போது 6 அடி 1 அங்குலமாக உயர்ந்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையை ஹார்வர்ட்டில் பயிற்சி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கெவின் மேற்கொண்டார்.
அல்போன்சோ உயரத்தை அதிகப்படுத்த மேற்கொள்ள அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரும், பின்னரும் உள்ள புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அல்போன்சோ மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் 55 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
தான் உயரமாக வேண்டும் என்பதின் மீதிருந்த ஆர்வம் குறித்து அல்போன்சோ கூறுகையில், 'இதற்கு முந்தைய எனது உயரமான 5 அடி 11 அங்குலம் என்பது நல்ல உயரம் தான். ஆனால், நான் அதைவிட இன்னும் சற்று உயரமாக விரும்பினேன். அதனால் 6 அடி 1 அங்குலம் வரை உயர முடிவு செய்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
உயரத்தை அதிகரிக்கும் ஆசையில் இளைஞர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதற்காக 55 லட்சம் வரை அவர் செலவு செய்தது தான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
