'என்ன ஒரு ஆனந்தம்.. அந்த கரடிக்கு..!!'.. ‘வீட்டுக்குள் புகுந்து செய்த சேட்டை’.. ‘இணையத்தில் வைரலாகும் வீடியோ!’
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் சைரியா என்பவர் வசித்து வருகிறார்.

இவருடைய இல்லத்தில் தான் கரடி ஒன்று புகுந்து செய்துள்ள சேட்டைகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து இவர்களின் வீட்டினுள் புகுந்த கரடி ஒன்று வீட்டில் உள்ள வளாகத்தில் வலம் வந்துள்ளது. இதனை சைரியா கவனித்துள்ளார்.
அதன் பின்னர் கரடியின் போக்கை அவர் ஆராய்ந்துள்ளார். வளாகத்தில் இருந்து வீட்டின் பின்புறம் சிறுவர்கள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான நீர் தொட்டியை அந்த கரடி அடைந்தது. அதன் பின் அந்த நீர்த்தொட்டியையே கரடி சுற்றி சுற்றி வந்திருந்தது.
அந்தத் தொட்டியை பார்த்ததும் கரடிக்கு ஏதோ தோன்றியது போலவே அந்த தொட்டிக்குள் பதமாக அந்த கரடி இறங்கியது. இறங்கியதுமே முதலில் நீரை ஆசைதீர பருகியது. அதன் பின்னர் அந்த தொட்டிக்குள் அப்படியே அமர்ந்து சிறிது நேரம் விளையாடத் தொடங்கியது.
நீரை உறிஞ்சி களித்த பின்னர் நீரில் நீந்தியும் களித்தது அந்த கரடி. இதில்தான் அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்!
அதன் பின்னர் அங்கிருந்து இறங்கி புறப்பட்டுச் சென்று விட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மற்ற செய்திகள்
