மேட்ச் பார்க்க வந்த ‘ரசிகருக்கு’ கொரோனா.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.. ‘அதிரடி’ நடவடிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிட்னியில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்தது. அதில் ரோஹித் ஷர்மா, சைனி ஆகியோர் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக மெல்போர்னில் நடந்த ‘பாக்சிங் டே’ 2-வது டெஸ்ட் போட்டியில் பார்வையாளராக பங்கேற்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாளை சிட்னி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 48 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்கும் வசதி கொண்ட சிட்னி மைதானத்தில், தற்போது 10 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும் பார்க்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.