'அமெரிக்காவிலும் பரவியது புதிய வகை வைரஸ்!!!'... 'பயண வரலாறு எதுவுமேயின்றி ஒருவருக்கு பாதிப்பு?!!... 'வெளியான அதிர்ச்சி தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் முதலாவதாக ஒரு நபருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கி அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், உலக அளவில் இதுவரை 8.23 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை அங்கு 1,19,77,704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவிலும் முதலாவதாக தற்போது புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடாவில் 20 வயதுடைய ஒரு நபருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபருக்கு பயண வரலாறு எதுவும் இல்லை என்பதால் அவருக்கு அங்குள்ள வேறு யார் மூலமாவது பரவி இருக்கலாமெனவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.