யாரெல்லாம் எங்க நாட்டுக்கு வர்றீங்க...? 'அதிரடி ஆஃபர்களை அள்ளி கொடுத்த விமான நிறுவனம்...' - ஆனா இந்த தேதிக்குள்ள டிக்கெட் புக் பண்ணியாகணும்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐக்கிய அரபு நாடான துபாய் விமான துறையில் இந்தியப் பயணிகளுக்கு என பல சலுகைகளை அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை மீட்டேடுக்கும் வகையில் அரசுகள் செயல்புரிந்து வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான பயணிளுக்கு பல சலுகைகளை எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விமானத்தில் பயணிப்போருக்கு எப்போதும் ஒரு பேக்கேஜ் எடை குறித்த தடை இருக்கும், அதனை தீர்க்கும் வகையில் இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்போர் கூடுதலாக 10 கிலோ பேக்கேஜ் எடுத்துச்செல்லலாம் எனவும், இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மார்ச் 15 முதல் ஜூன் 30 வரையிலான பயணங்களுக்கு மார்ச் 8-ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை economy class டிக்கெட் பதிவு செய்தால், துபாயில் இருக்கும் பிரபல JW Marriot Marquis ஹோட்டலில் ஒரு இரவு இலவசமாக பயணிகள் தங்கிக்கொள்ளலாம் எனவும், Business மற்றும் First Class டிக்கெட் பதிவு செய்வோர் இரண்டு இரவுகளுக்கு ஹோட்டலில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம் எனவும் எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.