'சென்னை பெண்கள் கொண்டாட... வந்தாச்சு 'டிவின் பேர்ட்ஸ்' ஆடையகத்தின் புதிய கிளை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா உட்பட பல நாடுகளில் மிக பிரபலமான ஆடை விற்பனையகமாக திகழ்கிறது ’டிவின் பேர்ட்ஸ்’.
![Twin Birds\' new brand store inaugurated in Chennai Twin Birds\' new brand store inaugurated in Chennai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/twin-birds-new-brand-store-inaugurated-in-chennai.jpg)
பெண்கள், இளம் பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என அனைத்து வயது பெண்களின் ஃபேஷன் கனவுகளுக்கான இடம் டிவின் பேர்ட்ஸ் ஆடையகம். டி-ஷர்ட்ஸ், ஆங்கிள் லெகின்ஸ், வைட் லெக் பலாஸோ, ஸ்லிம் ஃபிட் சிக்னேச்சர் கேப்ரி லெகின்ஸ், டெனிம் லெகின்ஸ், ஜீன்ஸ், அன்றாடம் அணியும் வகையிலான கேஷூவல் ஆடைகள் என எக்கச்சக்கமான கலெக்ஷன்கள் மற்றும் பல வண்ணங்களில், ரக ரகமான டிசைன்கள் நமது ‘டிவின் பேர்ட்ஸ்’ ஆடையகத்தில் கிடைக்கின்றன.
பெண்களின் அனைத்து ஆடை விருப்பங்களையும் கொண்டிருக்கும் ஃபேவரைட் ஆடையகமான டிவின் பேர்ட்ஸ், சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் முறையான கோவிட் வழிகாட்டல் நெறிமுறைகளுடன் தமது கிளைகளை மீண்டும் இயக்கத் தொடங்கியது.
அத்துடன், தமது புதிய கிளைகளையும் சென்னை உட்பட பல இடங்களில் நிறுவியும் வந்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், 2021, ஜனவரி 9 அன்று, சென்னை மாநகரில் உள்ள பெரவள்ளூரில் புத்தம் புதிய ஷோரூமை திறந்துள்ளது ‘டிவின் பேர்ட்ஸ்’ ஆடை விற்பனையக நிறுவனம். இந்த புதிய கிளையின் உரிமம் பெற்றுள்ள (Franchisee) பெண் தொழில்முனைவோரான ஹேமலதாவை ஊக்குவிக்கும் வகையில் ஷோரூமை திரு.ஜீவரத்தினம் மற்றும் திருமதி.நர்மதா துவங்கி வைத்து சிறப்பித்தனர்.
இந்த பண்டிகை காலத்தை, சென்னை பெண்கள் கொண்டாட, டிவின் பேர்ட்ஸின் இந்த புதிய கிளை இன்னொரு காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)