ஓட்டுப் போட வரும்போது ‘இதை’ மட்டும் எடுத்துட்டு வர மறந்துராதிங்க.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதில் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிற வாக்காளர்களுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.