'பீதியை கிளப்பிய ஓநாய் மாஸ்க் மனிதன்...' 'சோசியல் மீடியால பயங்கர டிரெண்டிங்...' - கடைசியில அதுவே வினையா முடிஞ்ச சோகம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Jan 02, 2021 11:05 PM

கொரோனா பரவலை தடுக்க பயன்படுத்த வலியுறுத்தப்படும் முகக்கவசத்தை சிலர் மற்றவர்களையும் பயப்படுத்த உபயோகித்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

teenager wearing \'wolf\' mask threaten New Year celebrations

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பெஷாவரில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்துள்ளது. அப்போது மர்மநபர் ஒருவர்  'ஓநாய்' போன்ற முகமூடி அணிந்து அந்த இடத்தில் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்துள்ளார்.

மேலும் அந்த ஓநாய் நபரின் புகைப்படம் டுவிட்டரில் பகிரப்பட்டு சமூக வலைத்தில் வைரலாவது. இதனை பலர் கிண்டலடித்து நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அறிந்த பாகிஸ்தான் போலீசார் பொதுமக்களை பயமுறுத்தும் விதத்தில் அவர் முகமூடி அணிந்திருந்ததாக வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் ஒமர் ஆர் குரைஷி என்பதும், குறும்புதனமாக இந்த வேலையை செய்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வேலியில் போன ஓநாயை வேட்டிக்குள் விட்டகதை என பலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags : #MASK #WOLF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Teenager wearing 'wolf' mask threaten New Year celebrations | World News.