"ஒரு கோடிப்பு!"... "US-ல் இந்த வாரத்துக்குள்ள பாருங்க!" .. இது டிரம்ப் சொல்லும் கணக்கு.!! கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மக்களின் விபரம் பற்றி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 13, 2020 11:41 AM

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையத்தின் அறிக்கைப்படி அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 92 ஆயிரத்தையும், உயிர் பலி எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 92 பரிசோதனை மையங்களில் நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corona test reaches 1 crore in US, says donald trump

இதுபற்றி பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை விடவும் அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளதாகவும் இந்த வாரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரும் கஷ்டத்தையும் வேதனையையும் அளிக்கும் இந்த கொரோனா சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், பொது, தனியார், ராணுவம், பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட அமெரிக்க துறைகளின் வளங்களை பயன்படுத்தி, கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல் 2 காலாண்டின் நிதி, பொருளாதார நிலைகளை இந்த கொரோனா சீர்குலைத்ததாகவும், அடுத்த 2 காலாண்டுகளில் இது நிகர நிலைக்குக் கொண்டுவரப்படும் என்றும் பேசிய டிரம்ப், அடுத்த ஆண்டு மிகப்பெரிய அளவிலான தேவை இருப்பதால் இதுவரை இல்லாத வகையில் சிறந்த ஆண்டாக அது இருக்கும் என்பதை தான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 40க்கும் மேற்பட்ட மாகாணங்கள் பொருளாதார ரீதியாக சீர்குலைந்துள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளையும், 21 ஆயிரம் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ள நியூயார்க்கில் வரும் வெள்ளிக்கிழமை முதல், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருளாதாரத்துக்கான வழிகளைத் திறக்கவும்  அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.