சென்னை அருகே பரபரப்பு!.. கொரோனா சிகிச்சையில் இருந்து தப்ப முயன்ற நபர் உயிரிழப்பு!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு அருகே கொரோனா சிகிச்சையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற ஒருவர் இன்று உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 8-ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்று யாருக்கும் தெரியாமல் வீட்டில் தலைமறைவாக இருந்தார். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது.
அதன்பேரில் போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த நபர் கொரோனா தொற்று காரணமாக இன்று விடியற்காலையில் உயிரிழந்தார்.
