இந்த பகுதிகளில் எல்லாம் ‘தலைதூக்கும்’ பாதிப்பு... ‘சென்னையை மிரளவைக்கும் கொரோனா’... .இந்த ஏரியாக்கள் பக்கம் போயிடாதீங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரிசோதனை அதிகளவில் நடத்தப்படுவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கும், இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கத்தில் 796 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தினந்தோறும் சுமார் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
திருவிகநகரில் 622 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே முதல் இடத்தில் இருந்த வந்த ராயபுரத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென அதிக கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், அதாவது ஆபத்தான பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. அதேபோல் வெளி ஆட்கள் உள்ளே வரவும் அனுமதி இல்லை. தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
Here's the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation pic.twitter.com/RiCblazl17
— Greater Chennai Corporation (@chennaicorp) May 13, 2020
