'ஆம்பன்' புயல் வர போகும் தேதியை அறிவித்தது...! 'வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...' சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 13, 2020 02:39 PM

வரும் 16 ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

in may 16 cyclone are expected in the central Bengal Sea

இந்திய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளான அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உண்டாகி உள்ளது. இதன் காரணமாக வரும் வரும் 15 ஆம் தேதியில் இந்த காற்றழுத்த மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும்,  அப்படி காற்றழுத்த மண்டலமாக உருவாகி அவை மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் காற்றழுத்த மண்டலமானது 16 ஆம் தேதி புயலாக உருமாறவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என்று பெயர் வைத்துள்ளனர்

மேலும் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என அறிவித்த வானிலை மைய அதிகாரி தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்

Tags : #CYCLONE