"சிகரெட்.. மது.. எந்த பழக்கமும் இல்லை.. ஆனால் இது இருந்தாலே.. குறிவைக்கும் கொரோனா!".. மருத்துவர்களின் அதிரவைக்கும் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 13, 2020 09:04 AM

வயிற்றுக் கொழுப்பு உள்ளவர்களை கொரோனா குறிவைப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

corona affects those who are having belly fats, says researches

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் சிகரெட் பிடிக்காதவர்களாகவும், மது அருந்தாதவர்களாகவும், 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்து வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்களின் வயிற்றுக் கொழுப்புதான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்து, தடுப்பூசி எதுவும் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்படாததால்,  நம் உடலிலேயே உள்ள எதிர்ப்புச் சக்தி அவசியம், அது வயிற்றுக்கொழுப்பினால் குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி பேசிய அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் மருத்துவரான பழனியப்பன் மாணிக்கம், வயிற்றுக் கொழுப்பை வைத்துக்கொண்டு கபசுர குடிநீரோ, நிலவேம்பு கசாயமோ, வைட்டமின் சி உள்ள பொருள்களோ எடுத்துக்கொண்டாலும், “ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றுவது” போன்றதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

வயிற்றுக் கொழுப்பைக் குறைத்தால், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் சர்வதேச அளவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தகுந்த உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வயிற்றுக் கொழுப்பை குறைக்கவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.