"விஜய் மாமா, ஹாய்".. கூலாக பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி.. இந்தியர்களை கவர்ந்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.

ரிஷி சுனக்கின் தாத்தா பாட்டி ஆகியோர், இந்தியாவின் பஞ்சாபை பூர்வீகமாக கொண்டிருந்த நிலையில், பின்னர் ஆப்பிரிக்காவில் குடி பெயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து இங்கிலாந்தில் ரிஷி சுனக்கின் பெற்றோர் உள்ளிட்டோர் குடிபெயர்ந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் ரிஷி சுனக் பிறந்தார்.
வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி, அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, இங்கிலாந்தின் பிரதமர் வசிக்கும் நம்பர் 10, டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில் தற்போது குடியேறியுள்ளார் ரிஷி.
இந்த நிலையில், ரிஷி சுனக்கின் புதிய வீடியோ ஒன்று தற்போது இந்தியர்களின் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது. பிரபல செஃப் சஞ்சய் ரெய்னா என்பவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், அவருடன் இணைந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் வீடியோ கால் ஒன்றில் பேசுகிறார். செஃப் சஞ்சய் ரெய்னா பகிர்ந்த அந்த வீடியோவில், ஒருவரிடம் வீடியோ காலில் பேசும் அவர், "மாமா, நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்யப் போகிறேன்" என கூறி விட்டு, கேமராவை பிரதமர் ரிஷி சுனக் பக்கம் திருப்புகிறார்.
தன் பக்கம் கேமரா வந்ததுமே, "விஜய் மாமா, ஹாய். நான் ரிஷி. எப்படி இருக்கிறீர்கள்?. 10 டவுனிங் தெருவிற்கு வரும் போது என்னை சந்திப்பீர்கள் என நம்புகிறேன். எனவே நீங்கள் இங்கு வந்ததும் உங்கள் சஞ்சயை டவுனிங் தெருவுக்கு அழைத்து வர சொல்லுங்கள்" என சிரித்த முகத்துடனும் ரிஷி பேசுகிறார்.
Visa on arrival ab pakka 😊😊#RishiSunak pic.twitter.com/imSIhuEgKB
— Sanjay Raina (@sanjayraina) October 27, 2022
விஜய் மாமா, ஹாய் என ரிஷி சுனக் சொன்ன விஷயம் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மற்ற செய்திகள்
