1947 முதல் இந்திய தலைவர்கள் குறித்து இருந்த கருத்து ... ஆனா இப்போ.. ஆனந்த் மஹிந்திரா போட்ட தரமான ட்வீட்..
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றிருக்கும் நிலையில் இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ட்வீட்
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் போது, அனைத்து இந்திய தலைவர்களும் குறைந்த திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என வின்ஸ்டன் சர்ச்சில் கூறினாராம். ஆனால், இன்று, நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்படுவதைக் காண நாங்கள் தயாராக உள்ளோம். வாழ்க்கை அழகானது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | "இதை பார்த்ததுல இருந்து சிரிப்பை அடக்கமுடியல..வா ராஜா வா".. சியான் விக்ரம் பகிர்ந்த வீடியோ..!

மற்ற செய்திகள்
