2-வது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி.. சர்ப்ரைஸ் விசிட் அடிச்ச தல தோனி.. வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. இந்நிலையில் இந்திய வீரர்களை தோனி சந்தித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

வெற்றி
இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. முந்தைய T20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வத்துக்கு மத்தியில் 2வது டி20 போட்டி நேற்று பெர்மிங்கம்மில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 26 ரன்களும் குவித்து வலுவான அடித்தளத்தை கொடுத்தனர்.
அதன்பின்னர் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 46 ரன்களை விளாச, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது.
சேசிங்
இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இந்திய அணியின் பவுலிங் யூனிட். குறிப்பாக புவனேஷ்வர் குமாரின் வேகத்தில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனையடுத்து 17 ஓவர்களிலேயே 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது இங்கிலாந்து அணி. இதன்மூலம் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2 வெற்றியுடன் கைப்பற்றியது.
தோனியின் சர்ப்ரைஸ் விசிட்
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று வீரர்களை சந்தித்திருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி. வீரர்களிடம் கலந்துரையாடிய தோனி, பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Always all ears when the great @msdhoni talks! 👍 👍#TeamIndia | #ENGvIND pic.twitter.com/YKQS8taVcH
— BCCI (@BCCI) July 9, 2022

மற்ற செய்திகள்
