"ரிஷி சுனக் KIDNAP.. நெஹ்ராவ அனுப்பிடலாம்".. பிரபல தொழிலதிபரின் நண்பர் போட்ட 'ஜாலி' பிளான்??..😀
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமராக இருந்து வந்த லிஸ் ட்ரஸ், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்து விலகி கொண்டார்.

Also Read | காளான் பறிக்க போன பெண்கள்.. திடீர்ன்னு பாஞ்ச துப்பாக்கி குண்டு.. கொலையாளி சொன்ன குலை நடுங்கும் வாக்குமூலம்!!
பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தது பிரிட்டன் அரசியலில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பேசு பொருளாக மாறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராகி உள்ளதால், பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராவது இது தான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா போல ரிஷி சுனக் இருப்பதாக கூறி பல்வேறு கருத்துக்களும் இணையத்தில் அதிகம் வலம் வந்திருந்தது.
சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று நெஹ்ரா போட்டோவை பகிர்ந்து, பிரிட்டன் பிரதமரானதற்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்திருந்தனர். அப்படி ஒரு சூழ்நிலையில், இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா, ரிஷி சுனக்கை குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடிய ஹரிஷ் கோயங்கா, ரிஷி சுனக் குறித்த தனது ட்விட்டர் பதிவில், "எனது நண்பர் ஒருவர், கோஹினூர் வைரத்தை திருப்பி இந்தியா கொண்டு வர சில ஆலோசனைகளை சொன்னார். முதலில் ரிஷி சுனக்கை இந்தியாவிற்கு அழைக்க வேண்டும். தனது மாமனார் மற்றும் மாமியாரை அவர் பார்க்க போகும் போது பெங்களூர் டிராபிக் நெரிசலில் அவரை Kidnap செய்ய வேண்டும். அவருக்கு பதிலாக ஆஷிஷ் நெஹ்ராவை பிரதமராக திருப்பி அனுப்ப வேண்டும். யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். கோஹினூரை திரும்ப கொண்டு வரும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நெஹ்ரா அங்கே கூறுவார்" என ஜாலியான ஆலோசனையை குறிப்பிட்டு ஹரிஷ் கோயங்கா ட்வீட் செய்துள்ளார்.
ரிஷி சுனக் மற்றும் நெஹ்ராவை குறிப்பிட்டு பிரபல தொழிலதிபர் போட்டுள்ள ஜாலியான ட்வீட்டும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | T20 World Cup : ஆறிப் போன உணவை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்??.. சேவாக் போட்ட பரபரப்பு ட்வீட்!!

மற்ற செய்திகள்
