பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. வெளியானது வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.. முழு விபரம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் லிஸ் டிரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
Also Read | செங்குத்தான ராட்டினத்தில் ஜாலி ரைடு போன மக்கள்.. கொஞ்ச நேரத்துல நடந்த சம்பவம்.. பதறிப்போன அதிகாரிகள்..!
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க இருப்பதாகவும் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு வந்தனர். இதில் இந்திய பூர்வீகத்தை சேர்ந்த ரிஷி சுனக்-கும் ஒருவர்.
Credit : Independent
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
பிரதமர் தேர்தல்
பிரிட்டன் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில், இறுதி சுற்றில் ரிஷி சுனக் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் போட்டிபோட்டனர். இதற்கான வாக்கெடுப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் லிஸ் டிரஸ்க்கு 81,326 வாக்குகளும் ரிஷிக்கு 60,399 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதன்மூலம் பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகியுள்ளார் லிஸ் டிரஸ். இதன் மூலம் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து உலக தலைவர்கள் பலரும் லிஸ் டிரஸ்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Credit : The Telegraph
முன்னதாக "ஒருவேளை பிரிட்டன் பிரதமர் தேர்தலில் தோல்வி பெற்றாலும் புதிய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்" என ரிஷி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.