அரசர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.. பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்.. வைரலாகும் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் பிரதமர் வசிக்கும் நம்பர் 10, டவ்னிங் தெருவில் உள்ள இல்லத்தில் தற்போது குடியேறியுள்ளார் ரிஷி. அங்கே அகல் விளக்குகளை ஏற்றி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார் அவர். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. நம்முடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களுக்கான அகல்விளக்குகளை மகிழ்வுடன் ஏற்றவும், வளமான எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு பிரதமராக நான் முன்னெடுப்பேன். அனைவர்க்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர், இங்கிலாந்து அரசர் சார்லஸ் ரிஷி சுனக்கிற்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பக்கிங்காம் அரண்மனையில் மன்னரை ரிஷி சுனக் சந்தித்தபோது அவருக்கு இனிப்புகளை வழங்கியுள்ளார் அரசர்.
Brilliant to drop into tonight’s Diwali reception in No10.
I will do everything I can in this job to build a Britain where our children and our grandchildren can light their Diyas and look to the future with hope.
Happy #Diwali everyone! pic.twitter.com/g4yhAGhToz
— Rishi Sunak (@RishiSunak) October 26, 2022