‘இவரலாம் விட்டு வைக்கக் கூடாது; வெறிநாயை அடிக்குற மாதிரி அடிச்சுக் கொல்லணும்’.. 'கொலைகாண்டில்' அரசு செய்தி நிறுவன அறிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Nov 15, 2019 12:36 PM
‘இவரலாம் விட்டு வெக்க கூடாது; வெறிநாயை அடிக்குற மாதிரி அடிச்சுக் கொல்லணும்’.. 'கொலை காண்டில் ' அரசு செய்தி நிறுவன அறிக்கை!
அமெரிக்க முன்னாள் துணை அதிபர், வெறிநாயை அடித்துக் கொல்வது போல், அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று வட கொரிய அரசின் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கொலைகார சர்வாதிகாரி என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதை இணையத்தில் காணலாம்.
இதனை அடுத்து, வட கொரிய தலைமை கோபமாகியிருக்க வேண்டும் என்பதை அந்நாட்டு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆம், ‘அதிகார வெறி பிடித்த அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போன்ற வெறிநாய்களை விட்டு வைப்பது ஆபத்தானது; ஆகையால், அவரை உடனே தாமதிக்காமல் அடித்துக் கொல்லவேண்டும்’ என்று வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.